Ads

சனி, 20 செப்டம்பர், 2014

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்(9)

........"கண்டிப்பாக.  சொல்கிறேன்.என் பெயர்  வருண்.வயது 27, மனநல மருத்துவர். அம்மா வீட்டை கவனித்து கொள்கிறார். நான் அம்மா செல்லம்.அப்பா குழந்தை  நல மருத்துவர். ஒரு அக்கா திருமணம்  முடிந்து
ஒரு பெண்  குழந்தை. பெயர்  தீப்தி.அப்பாவுக்கு ஒரே தங்கை .அத்தைக்கு ஒரு பையன்  ஒரு பொண்ணு, மாமா அப்புறம் தாதா, பாட்டி.என்று எங்கள்  வீடு .என் வீட்டை பார் என்னை பிடிக்கும் "என்று நிறுத்தினான்.
அதை படித்ததும்  அவள் முகம் பொர்ணமி  நிலவாக ஜொலித்தது.
      மீண்டும்  அவனே "என்ற பாடல்  வரி போல. இருக்கும்  என் வீடு "என்றான்.
இயல்புக்கு வந்தவள் "நீங்கள்  ரொம்ப அதிர்ஷ்டசாலி.உங்கள்  வீடு  எப்போதும் கலகலப்பாக இருக்கும்.நான் உங்கள்  வீட்டிற்கு வரலாமா.அவர்களை பார்க்க ஆசையாக. இருக்கிறது. என்னென்றால்  என் வீட்டில் என் பெற்றோர்  மட்டும்  தான் "என்று அனுப்பனாள். அவளின்  ஏக்கம்  புரிந்து.
"ஓ, தாராளமாக வரலாம். "என்றான்.
"அப்போ நாளை மாலை வரட்டுமா?அந்த குடியிருப்பில் உங்கள் கதவு  எண் என்ன?  "என்றாள்.
"சாரி. இது என் வீடு  இல்லை. இது என் தோழி சாராவின்  மாமியார் வீடு. அவளுக்கு போன வருடம் தான் திருமணம் நடந்தது.என் வீடும் கோவைதான். அத்தை குடும்பத்தோடு  வீட்டிற்கு  வந்திருக்கிறார். அதனால்  நான் இங்கே  ஒரு வாரம் தங்க வந்தேன்."என்றான் .
"ஏன் அத்தை குடும்பத்தை பிடிக்காதா "என்றாள் புரியாமல்.
"என்ன வார்த்தை சொல்லிவிட்டாய்?.லட்டு மாதிரி ஒரு பெண்  வைத்திருக்கும்  அத்தையை யாருக்கு தான் பிடிக்காமல் போகும் சொல்லு "என்றான் வருண்
"ஓ, அப்புறம்  ஏன் இங்கு  இருக்கறிங்க டாக்டர்  சார் "என்றாள் விளையாட்டாக.

இந்த கேள்வியின் பதில் அவளை எந்தளவு காயப்படுத்த போகுது என்று தெரிந்திருந்தால் இப்படி கேட்டிருக்க மாட்டாள்.ஆனால் என்ன செய்யா,..,.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக