Ads

சனி, 20 செப்டம்பர், 2014

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்(9)

........"கண்டிப்பாக.  சொல்கிறேன்.என் பெயர்  வருண்.வயது 27, மனநல மருத்துவர். அம்மா வீட்டை கவனித்து கொள்கிறார். நான் அம்மா செல்லம்.அப்பா குழந்தை  நல மருத்துவர். ஒரு அக்கா திருமணம்  முடிந்து
ஒரு பெண்  குழந்தை. பெயர்  தீப்தி.அப்பாவுக்கு ஒரே தங்கை .அத்தைக்கு ஒரு பையன்  ஒரு பொண்ணு, மாமா அப்புறம் தாதா, பாட்டி.என்று எங்கள்  வீடு .என் வீட்டை பார் என்னை பிடிக்கும் "என்று நிறுத்தினான்.
அதை படித்ததும்  அவள் முகம் பொர்ணமி  நிலவாக ஜொலித்தது.
      மீண்டும்  அவனே "என்ற பாடல்  வரி போல. இருக்கும்  என் வீடு "என்றான்.
இயல்புக்கு வந்தவள் "நீங்கள்  ரொம்ப அதிர்ஷ்டசாலி.உங்கள்  வீடு  எப்போதும் கலகலப்பாக இருக்கும்.நான் உங்கள்  வீட்டிற்கு வரலாமா.அவர்களை பார்க்க ஆசையாக. இருக்கிறது. என்னென்றால்  என் வீட்டில் என் பெற்றோர்  மட்டும்  தான் "என்று அனுப்பனாள். அவளின்  ஏக்கம்  புரிந்து.
"ஓ, தாராளமாக வரலாம். "என்றான்.
"அப்போ நாளை மாலை வரட்டுமா?அந்த குடியிருப்பில் உங்கள் கதவு  எண் என்ன?  "என்றாள்.
"சாரி. இது என் வீடு  இல்லை. இது என் தோழி சாராவின்  மாமியார் வீடு. அவளுக்கு போன வருடம் தான் திருமணம் நடந்தது.என் வீடும் கோவைதான். அத்தை குடும்பத்தோடு  வீட்டிற்கு  வந்திருக்கிறார். அதனால்  நான் இங்கே  ஒரு வாரம் தங்க வந்தேன்."என்றான் .
"ஏன் அத்தை குடும்பத்தை பிடிக்காதா "என்றாள் புரியாமல்.
"என்ன வார்த்தை சொல்லிவிட்டாய்?.லட்டு மாதிரி ஒரு பெண்  வைத்திருக்கும்  அத்தையை யாருக்கு தான் பிடிக்காமல் போகும் சொல்லு "என்றான் வருண்
"ஓ, அப்புறம்  ஏன் இங்கு  இருக்கறிங்க டாக்டர்  சார் "என்றாள் விளையாட்டாக.

இந்த கேள்வியின் பதில் அவளை எந்தளவு காயப்படுத்த போகுது என்று தெரிந்திருந்தால் இப்படி கேட்டிருக்க மாட்டாள்.ஆனால் என்ன செய்யா,..,.. 

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (10)

 ......."அஞ்சலி  என் அத்தை மகள். அவளுக்கு  என்னை திருமணம்  செய்து கொள்ள ஆசை.எனக்கும் தான்.சரி சாராவிடம் கேட்டேன். அவளுக்கு அஞ்சலியை தெரியும் என்பதால் ஓகே சொல்லிவிட்டாள்.இப்போ  நீயும்  என் முக்கியமான தோழி ஆகையால்  அஞ்சலியை பார்த்து எனக்கு சரியான ஜோடியா என்று சொல்லவேண்டும்.உன் சம்மதமும் எனக்கு  முக்கியம்."என்றான் வருண்.
இதை படிக்கும் போதே வியர்வையில் குளித்தாள்.அவள்  இருந்த அறை இடிந்து  அவள் தலையில் விழுந்தது  போல உணர்ந்தாள்."சே.அவனுக்கு திருமணம் என்றால் எனக்கு என்ன .நான் ஏன் இப்படி நொருங்க வேண்டும் என்று நினைத்தாலும் அவளுக்கு ஏனோ அழுகையாக வந்தது.ஜன்னலை  விட்டு விலகி வந்தாள்.கண்ணீர்  வழிய "பார்த்து சொல்கிறேன். எனக்கு கொஞ்சம் களைப்பாக உள்ளது  நாம் அப்புறமேல்  பேசலாம் "என்றவள் அவன் பதிலுக்கு  காத்திருக்காமல் கட்டிலில் படுத்தாள்.
ஆனால் அவனோ "ஏய் என்ன நீ, அஞ்சலியை பற்றி நிறைய பேசவேண்டும். ம் சரிம்மா, நீ தூங்கு  அப்புறம்  பேசலாம் "என்றான்  வருண்.
               பூஜாவுக்கு நெஞ்சை அடைத்தது. என்ன இது ,எதற்காக  நான் இப்படி வருத்தப்படவேண்டும் .என்ன முட்டாள்தனம். வெறும் இரண்டு  முன்று நாள் மட்டுமே தெரிந்த ஒருவன்  மேல் எதற்காக உரிமை கொண்டாடுகிறது என் மனம். நான் யாரோ அவன் யாரோ என்று நினைக்கையிலேயே  கண்ணீர் அருவியானது.எத்தனை  நேரமாக இப்படி  கட்டில் மேல் கிடந்தாளோ அறை கதவு  தட்டும் ஒசை கேட்டு நிழல் காலத்திற்கு  வந்தாள்.
"வரேன் "என்று கதவை திறக்க சென்றாள்.
தோழி  சுவாதி  தான் "ஏய் கும்பகார்னி ,சீக்கிரம் கீழே வா, சினிமாவுக்கு நேரமாச்சு. "என்று சொல்லிவிட்டு போனாள்.
பாத்ருமிற்குள்  போய் முகத்தை கழுவி தலையை சீவி ,போனை எடுத்து கொண்டு கீழே வந்தாள்.4ஸ்கூட்டரில்  கிளம்பினார்கள்.தியேட்டரில்  நல்ல கூட்டம் டிக்கட்டை காலையிலேயே  எடுத்ததால்
நேராக. உள்ளே  சென்று சீட்டில்  அமர்ந்தனர்.
7பேர் முன் வரிசையும் ஒரு சீட் பின் வரிசையில் இருந்தது.பூஜா "நான் பின் வரிசையில் உட்கார்ந்து கொள்கிறேன் " ™என்று தனியாக போய் அம்ர்ந்தாள்.பூஜாவின் பக்கத்து சீட் காலியாக இருந்தது .படம் ஆரம்பித்தவுடன் தோழிகள் கைத்தட்டல்.  விசில் என்று ஒரே ரகளை தான்.முன்பெல்லாம்  அவர்கள்  ரகளை செய்யும்  போது கலந்து கொள்ளவில்லை என்றாலும் ரசிப்பாள். ஆனால் இன்று  எதையும் ரசிக்கும் மனநிலை  இல்லை என்பதே உண்மை. அவள் மனம்  இன்னும்  வலித்து.அதன் எதிரோலியாக கண்ணீர்  வழிந்தோடியது.
"ஏன் பாப்பா , படம் ஒண்ணும் அப்படி  சோகமா இல்லையே. "-என்றார் அருகில் அமர்ந்திருந்த முதியவர். அப்பொழுது  தான் அவள்  அவரை  கவனித்தாள்.எதுவும் பேசாமல்
கண்களை   துடைத்து  கொண்டாள்.திரை பார்த்தாள் .நகைச்சுவை  படம் என்பதால்  நொடிக்கு ஒரு தடவை  சிரிப்பு  சத்தம்  கேட்டது.அவளுக்கு  கவனம்  எங்கோ  இருந்தது. ஒருவழியாக இடைவேளை  வந்தது.
   தோழிகள்  எழுந்து  வெளியே  வர  ஸ்வேதா  "பூஜா  உனக்கு  சாப்பிட ஏதாவது  வேண்டுமா "என்றாள்.
"இல்ல எதுவும்  வேண்டாம் "என்றாள்.
"ஓகே "என்று அவளும்  வெளியே  செல்ல பூஜா  கையை தலையில் வைத்து கீழே குனிந்து  உட்கார்ந்தாள்.பக்கத்தில்  யாரோ நிற்பது  போல. உணர கண்களை துடைத்து கொண்டு நிமிர்ந்தாள்.
அங்கு ஒரு  சிறுமி 12அல்லது 13 வயது  இருக்கும் வசதியான வீட்டுபெண் என்பது  உடையில்  இருந்து  தெரிந்தது. பூஜாவிடம் ஒரு ஐஸ்கீரீமை  நீட்டி  அழகாக தலை சாய்த்து  சிரித்தாள் .ஏதும்  புரியாமல்  பூஜா  விழிக்க "பூஜா  ஆன்ட்டி, என்ன இப்படி  பார்க்கறீங்க, நான் தான் அஞ்சலி. வருண் மாமாவோட அத்தை  பொண்ணு.என்னை பார்க்கனும் என்று மாமாகிட்ட நீங்க சொன்னாத சொன்னார் ."என்றாள் சிறுமி.
 பூஜாவுக்கு அஞ்சலி  சொன்னதில் பின்பாதி  ஏதுவும்  காதில் விழவில்லை. பூஜாவுக்கு தலைகால் புரியவில்லை. சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனாள்.
அப்படியானால் அவன்  தன்னிடம்  சும்மா  குறும்பு  செய்திருக்கிறான்.'வரூண் உன்னை 'என்று நினைக்கையில் "ஹாய் ஆன்ட்டி "என்றாள் இன்னொரு  சிறுமி 4 அல்லது5
வயது இருக்கும்.
"இவ தீப்தி ."என்றாள் பெரியவள்.
அதற்குள்  படம்  ஆரம்பிக்க
"இந்தாங்க ஆன்ட்டி ,மாமா கொடுத்தார் "என்று சொல்லிவிட்டு அவர்கள் சீட்டுக்கு  ஓடினார்கள்  .அவர்களையே  பார்த்தவள் அங்கு
வருணை தேடினாள்.ஆனான் அந்த வரிசை  முழுவதுமே பெண் கள் தலைகளாக இருக்க. அவள் சுற்றும் முற்றும்  பார்த்தாள்."வருண் நீ மட்டும்  இப்போ என் ஏதிரில்  இருந்தாய்  என்றால்  உன்னை என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது.மதியத்தில்  இருந்து  என்னை எப்படி  வேதனைபட வைத்தாய். "என்று நினைத்தவள் போனை  எடுத்து  அதற்கு  முத்தம்  கொடுத்தாள். அப்போது  ஒரு தகவல்  வர போனிலிருந்து  வந்த வெளிச்சம்  அவள்   முகத்தில் பரவியது.
போனை கீழே  இறக்கினாள்.
"என்ன பூஜா குட்டி,  அஞ்சலி எனக்கு  பொருத்தமான ஜோடி  தானே.அதனால் தானே சந்தோஷத்தில் போனுக்கு முத்தம் கொடுக்கிறாய் "என்றான்  வருண்.
'ஆமாம் இவருக்கு  பெண்  பார்க்கதான்  நான் இருக்கேனா  "என்று சொன்னாள் ஆனால்
போனில்  "பொண்ணு  சிறுமியா  இருக்காளே. அவள் படித்து முடிக்க இன்னும்  கண்டிப்பாக 10வருடமாகும்.அப்படி  கல்லூரியில் படிக்கையில்  அவளுக்கு வேறு யாரையாவது  பிடித்துவிட்டாள் நீங்கள்  என்ன செய்வீர்கள்  வருண்.10 வருட காத்திருப்பு வீண்.அதுவுமில்லாமல்  உங்களுக்கு  36 வயதாகிவிடும்.ஒருவேளை
அஞ்சலியே மறுக்கலாம். "என்று அனுப்பினாள்.
"அட, நீ சொல்வதைப்பற்றி நான் யோசிக்கவேயில்லை.36 வயதில்  யார்  என்னை கல்யாணம்  பண்ணிக்குவாங்க "என்றான்  வருண்.
"ஏன் நானில்லை "என்று அவள் வாய்விட்டு சொன்னாலும்  போனில்  "ம் நன்றாக யோசித்து முடிவெடுங்கள் "என்று அனுப்பினாள். திடீரென்று  இருமல் சத்தம் கேட்டபோது தான்  பக்கத்து சீட் தாதா ஞாபகம்  வர 'அடடா, இத்தனை  நேரம் நான் பேசியதைல்லாம்  இவர் கேடட்டிருப்பாரோ. 'என்று நினைக்கையில்  அவளுக்கு  வெட்கமாக  இருந்தது. போனை உள்ளே வைத்துவிட்டு  படத்தை பார்த்தாள். ஆனால் இப்பொழுதும் படத்தில்  கவனமில்லை. முதல்பாதி வருத்ததால் ரசிக்கவில்லை என்றால்  பின் பாதியை  சந்தோஷத்தால் ரசிக்கவில்லை.
இந்த வருண்  சரியான. குறும்புக்காரன்.'
 'மதியத்திருந்து என்னை ஒருவழி செய்துவிட்டான் இப்பொழுது  மட்டும் அவன் என் கையில் கிடைத்தான்  அவ்வளவு தான்.ஆனால் அதற்கு  அவனை முதல் கண்டுபிடிக்க வேண்டுமே.அதற்கு என்ன வழி 'என்று  மனதில்  யோசித்தாள்.
படம் முடிந்தது. தோழிகளோடு  வெளியே  வந்தாள்.
"ஏய் நீங்க இங்க நில்லுங்க. நாங்க போய் வண்டியை  எடுத்துட்டு வர்றோம் "என்றாள் சுவாதி. அதுவும்  சரிதான். வண்டிகள் நிற்கும்  இடத்தில் நல்ல கூட்டம் ஒருவரை ஒருவர் இடித்துகொண்டும் முறைத்துகொண்டும் இருக்கையில் நான்கு  வண்டியை  எடுக்க எட்டு  பேர் போனால்?.அவ்வளவு  தான்.
"ஓகே, நாங்க கேட் கிட்ட நிற்கறோம் "என்று சொல்லிகொண்டே  கேட்டை நோக்கி நடந்தார்கள்.
"பூஜா ஆன்ட்டி "என்று சத்தம்  கேட்க. பூஜா திரும்பி  பார்த்தாள். அது வேறு யாருமில்லை  தீப்தி தான்.
பூஜா அவளை பார்த்து  கையசைக்க திப்தீயும் கையசைத்து  விட்டு நின்று கொண்டிருந்த காரில் ஏறினாள். சரியென்று  கேட்டை  நோக்கி நடந்தாள்.'வருணை எப்படி கண்டுபிடிப்பது என்று நினைத்தவளின் மூளை சட்டென்று வேளை செய்ய தீப்தி ஏறிய காரை பார்த்தாள். அப்பொழுது கார் அவள் அருகில்  வர அந்த காரின்  உள்ளே தெரிந்த ஒரு பொம்மை அவளை  ஈர்த்தது. கார் நம்பரை  பார்த்தவள்  அதிர்ச்சியடைந்தாள்.

அதே பொம்மை, அதே நம்பர் 

அதே வண்டி தான் 


அப்போ    வருண்?



தொடரும்,.....,.,,,.,

சனி, 19 ஜூலை, 2014

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (3)


      நூலகத்திற்கு திருப்பி கொடுக்க வேண்டி புத்தகங்ளை எடுத்து தன் கைப்பையில் வைத்தபோது ஏதோ ஒரு பாட்டு சத்தம்  கேட்டது.சத்தம்  எங்கேயிருந்து வருகிறது என்று சுற்றும்  முற்றும்  பார்த்தாள்.கட்டில்  மேலிருந்த பார்சலிருந்து  தான் சத்தம்  வந்தது.அதை பிரித்தாள்.உள்ளே மல்லிகை பூக்களுக்கிடையே ஒரு அழகிய. செல்போன்.
நான்கு நாட்களுக்கு முன்பாக ப்ரியா ஒரு செல்போன் வாங்க பூஜாவையும் அழைத்து சென்றாள்.அங்கு பூஜாவுக்கு ஒரு போன் மிகவும்  பிடித்தது  .ஆனால்  ப்ரியாவுக்கு எதுவும்  பிடிக்கவில்லை ."நீ வேணும்னா வாங்கிக்கோ"என்றாள்.
"ம்ம்ம் எனக்கு வேண்டாம் "என்றவளை பார்த்து "சரி நீ இவ்வளவு தூரம் சொல்லுவதால்இந்த போனை   வாங்கிஉன்கல்யாண பரிசா கொடுக்கிறேன் "என்றா ள் கண்சிமிட்டியபடி."ஏய் "என்று ப்ரியாவை செல்லமா கோபித்து கொண்டாள்.அந்த போன்  தான் இப்பொழுது அவள் கையில் உள்ளது.பார்சலில் எந்த முகவரியும்  இல்லை.யாரு அனுப்பிஇருப்பா? என்று யோசித்தடி சீதா அறைக்கு சென்று கேட்க அவளோ "உன்னோட மாமா பையன்  என்று சொல்லி தான் கொடுத்தான் "என்றாள்.பூஜாவுக்கு தலை வலித்தது.எந்த. மாமா பையன்?யோசித்தபடியே தன் அறைக்குள் நுழையும் போது போன்க்கு ஒரு குறுந்தகவல் வந்தது.
   "ஹாய் என் பெயர் வருண்.நான் மனநல மருத்துவர். போன. வருடம்  என் உறவினர்  வீட்டு  திருமணத்தில்  உன்னை
முதல் முதலாக பார்த்ததேன்.பிறகு பல தருணங்களில் ஏதேச்சையாக உன்னை பார்த்தேன்.நான்கு  நாட்களுக்கு முன்பு கூட அந்த. போன்  கடையில் உன்னை பார்த்தேன். உன்னிடம் பேச நினைத்தேன்.ஒரு சிறு  தயக்கம். நீ தவறாக. எடுத்துகொள்ளதே
.நீ என் தோழியாக இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு தான் இந்த போனை  உனக்கு பரிசாக அனுப்பிவைத்தேன்."என்று எழுதி  இருந்தான்.
"மன்னிக்கவும், முகம் காட்ட தயங்குபவருடன் என்னால் தோழியாக பழகமுடியாது.அதனால்   கீழே வாட்சுமேன் தாதாவிடம் போனை கொடுத்துவிடுகிறேன் பெற்றுகொள்ளுங்கள் "என்றவள் கட்டில் மேலிருந்த பொருட்களை எல்லாம் எடுத்து ஒரு கவரில் போட மீண்டும் பாடல்  கேட்க அது குறுந்தகவல்  தான். எடுத்தாள் "முகம் காட்ட தயங்கவில்லை தோழியே!இன்னும்  ஒரு வாரத்தில் நீ ஊருக்கு கிளமபிவிடுவாய் அதற்குள்  ஏன் முகம் காட்டி தோழமையை வளர்க்க வேண்டும்.எனக்கு உன்னோடு மட்டும்  தான் பழகவேண்டும்  உன் தோழிகளிடம்  அல்ல."என்றான்.
"நீ என்னோடு தோழமையோடு தான் பழகுகிறாய் என்று நான் எப்படி  நம்புவது.முன்பின் அறிமுகம் இல்லாத உன்னிடம் நான் எப்படி ஒரு பொருளை பரிசா வாங்குவது "என்றாள்.2 நிமிடத்தில் பதில் வந்தது."ஏன் நேற்று  மாலை திரையரங்கில் மட்டும்  நான் வாங்கி கொடுத்த ஐஸ்ஸை ரசித்து சாப்பிட்டாயே "என்றான். இதை படித்தவுடன் பூஜாக்கு சட்டென்று அவனது பளிச் கண்கள்  தான் ஞாபகம்  வர அவள் உடல்  சிலிர்ப்பதை உணர்ந்தாள். ச்சே இனி  என்ன எழுதுவது என்று முழிக்க. அவனே தொடர்ந்தான் "நீ என்னை நம்பாலாம் நான் உன்னை ஒன்றும்  செய்யமாட்டேன்.வெறும் ஏழு நாட்கள்  தானே.அப்பா, ஒருவருடன்  நட்பு வைத்துகொள்ள. இவ்வளவு  யோசனையா? .என்றான்.பதிலேதும் எழுதாமல் கட்டிலில் படுத்து யோசித்தாள். உண்மை தான் நேரிலா பேசுகிறோம் போனில் அதுவும் குறுந்தகவல்  தானே என்று நினைத்தவள்  அப்படியே தூங்கிபோனாள்.
       

அவள் வாழ்க்கையில்இந்த 7. நாட்கள்  திசை மாற்ற போவது தெரியாமல் தூங்கிகொண்டிருக்கிறாள்.


தொடரும்.,.



வெள்ளி, 18 ஜூலை, 2014

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (2)


நம்ம பூஜா  பொள்ளாச்சி பொண்ணு.அம்மா,அப்பாவுக்கு ஒரே மகள். அம்மா  ரொம்ப கண்டிப்பு.அப்பா  நேர்எதிர்.எப்போதும் ஜாலி.பூஜா அப்பா செல்லம். பள்ளி படிப்பை பொள்ளாச்சியிலேயே முடித்தாள். அம்மா தான் கோவையில் உள்ள கல்லூரியில் தான் படிக்கணும் என்று சொல்லிவிட்டார்.வேறுவழியே இல்லை.பூஜா
தன் அப்பாவை ரொம்ப மிஸ் பண்ணினாள்.அதனால் தினமும்  காலை, மாலை இரண்டு  நேரமும் அவரிடம் பேசினாள் தான் தூக்கம் வரும்.
உடையை மாற்றிவிட்டு கீழ்அறைக்குள்  நுழைந்தாள்.அந்த அறையில் ஐந்து  கட்டில்  இருந்தது. அவை அனைத்தும் நிரம்ப கீழே பாய் விரித்து பாதி பேர் உட்கார்ந்திருந்தனார்.இனி விடியும் வரை இந்த இடம் தான்" என்று நினைத்தாள். விடியவிடிய கூத்தும்  கும்மாளமுமாக இருந்தது.
 இரவு  2மணிக்கு மேல் பூஜாவால் உட்காரமுடியவில்லை."ராணி நான் ரூமுக்கு போறேன் , தூக்கம் வருது."என்றவள் மேல் அறைக்கு  சென்றாள்.
மேஜை மேல் இருந்த புத்தகத்தை பார்த்ததும் 
தூக்கம்  போன இடம் தெரியவில்லை ..அது கல்கின்  சிவகாமியின்சபதம்.பாதியை நேற்று  இரவு  படித்தாள்.மீதியை இன்று படிக்க இருந்தாள்.எங்கே இப்போதே மணியாகி  விட்டது.புத்தகதத்தை வைத்துவிட்டு  போய் படுத்தாள்.ஆனால் அவளுக்கு  ஏனோ தூக்கம்  வரவில்லை. சிறிது நேரம்  புத்தகம்  படிக்காலம் என்று எண்ணியவள் புத்தகத்தோடு தன் கட்டிலில் படுத்தாள்.அவளது கட்டலருகில் உள்ள ஜன்னலில் பார்த்தால் நிலா தெரியும்.
அப்படி இரவில் வானத்தை  பார்த்தடியே  புத்தகம்  படிப்பது மிகவும்  பிடித்த விஷயம்.படித்தவள்  அப்படியே  உறங்கி   போனாள் .
காலை பூஜா  ரெடியாகி வர மணி 9 ஆகிவிட்டது.இந்த மூன்று  வருடத்தில் இப்படி  லேட்டாக கீழே வந்ததில்லை."சீதாக்கா போன் பண்ணிகிறேன்-பூஜா.
"ம்.சாவி இந்தா மா."-சீதா.
அப்பாவிடம் பேசிவிட்டு போனை பூட்டி விட்டு  சாவியை சீதாவிடம் கொடுத்துவிட்டு "ஸாரிக்கா, இன்னிக்கு கொஞ்சம்  லேட்டாயிடுச்சு. திவ்யா ஸ்குலுக்கு கிளம்பிட்டாளா,"-?"என்றாள்.
"ஹம், கிளம்பிட்டா-சீதா.
"அக்கா, இன்னிக்கு  சாயங்காலம்  நாங்க சினிமாக்கு போறாம், கூட திவ்யாவையும் கூட்டிட்டு போறாம்."-பூஜா.
"எனக்கு  ஒண்ணுமில்லை. ஆனா அவ உன் மேலே ரொம்ப கோபமா இருக்கிறாளே." -சீதா.
"நெனச்சேன்.மேடம் கோபமா இருந்ததுனாலே தான் காலையில் என் அறைக்கு வரவேல்லையா?ஒகே ஒகே."-பூஜா.
"நீ டிபன் சாப்பிடு  முதல்"-என்றவள்.இட்லியைவைத்து சாம்பார்  சட்டினியை ஊற்றினாள்
சீதா ரொம்ப கறார் மற்றும் கண்டிப்பானவர் இல்லையேன்றால் அந்த பெண்கள் விடுதியை நடத்தமுடியுமா.இப்படி யாருக்கும் 9மணிக்கு மேல் உணவு கொடுப்பதில்லை 8:45 என்றாலே எல்லாம் சாப்பாட்டு ஹாலை மூடி  விடுவாள்.ஆனால் பூஜாவிடம் அன்பாக இருக்க காரணம் திவ்யாவுக்கும் பூஜாவுக்கும் உள்ள நெருக்கம் தான்.சாப்பிட்டு விட்டு"அக்கா நான் கொஞ்சம்  வெளியே போறேன் உங்களுக்கு எதாவது  வாங்கனுமா? "என்றாள்.
"இல்லை பூஜா  எதுவுமில்லை "-சீதா.
"சரி "என்று மடிப்படி ஏறியவளை  சீதாவின் குரல் நிறுத்தியது. "பூஜா  காலையில் உனக்கு ஒரு பார்சல்  வந்தது. எடுத்துகோ."என்றாள்.
"எடுத்துகிறேன்  அக்கா "என்றவள்  தன் பெயரிட்ட  பெட்டியை எடுத்துகொண்டு  அறைக்கு சென்றாள்.பார்சலை கட்டில்  மேல் வைத்துவிட்டு  நூலகம் செல்ல தயாரானாள்.
               
                     
         அப்பொழுது.,.,
                     

தொடரும்


ஞாயிறு, 13 ஜூலை, 2014

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்(1)


அது கல்லூரியின் கடைசி  நாள் மாணவிகள் அனைவரும் சோகமாக இருக்க ஒரு மரத்தடியில் மட்டும் சிரிப்பு சத்தம் பலமான. 
:கேட்டது.இது நாள் வரை சுதந்திமாக சுற்றிவிட்டார்கள் இனி   கல்லூரி  வாழ்க்கை முடிவடைவதால் ஊருக்கு போனால் எல்லோருக்கும் திருமணம் நிச்சயமாக முடித்து மாமியார் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் பிறகு ஆளூக்கு ஒரு பக்கமாக பிரிந்துவிடுவார்கள் என்பதால் அனைவரும் தங்கள் பெற்றோரிடம் அனுமதி பெற்ஒ  ஒரு வாரம்  தோழிகளோடு தங்கள் விடுதிலேயே தங்கினார்கள்.அதனால் இப்போ எப்படி  ஒரு வாரத்தை திருப்தியாக கழிப்பது தான் திட்டம் போடுகிறார்கள்.அன்று  மாலை சினிமாவுக்கு போவாது என்று முடிவானது."
ஹேய். என் ஹீரோ நடித்த படத்துக்கு போகாலாம் "-பூஜா.
"ஓகே"-கோரஸ்ஸாக சொல்ல.
"சரி, வாங்க எல்லோரும்  போய் போட்டோ எடுக்காலாம்."-அஞ்சு அழைக்க  சபை கலைந்தது.மாலை 5மணிக்கு எட்டு ஸ்கூட்டரில்
 திரைஅரங்கத்திற்குள் நுழைந்தனார்.  உள்ளூர் தோழிகளும் இவர்களுடன் இருந்ததால் ஸ்கூட்டர் கிடைத்தது.ஆங்கிலப்படம் என்பதால்பெரிய. கூட்டம் இல்லை.பூஜாவுக்கு எப்போழுதும் ஆங்கிலப்படம் பார்க்க. பிடிக்கும்  குறிப்பாக சண்டை  காட்சியை அவள்  ரசித்து பார்ப்பாள் ஆனால் தோழிகளுக்கு தமிழ்  படம் தான்.உள்ளே சென்று அமர்ந்தனர்.படம் ஆரம்பித்தது ஹீரோ உயிரை கொடு த்த சண்டை  போட்டு கொண்டிருந்தான்.ஒரு காட்சியில் அவளுக்கு விசில்  அடிக்கா தோன்றியது. அவளுக்கு விசில் அடிக்க வாரது என்பதால்  தோழிகளிடம் கெஞ்ச அவர்களோ "உன் கூட இந்த படத்துக்கு வந்தே  பெருசு,இதுல விசில் வேறெய"என்று கிண்டல் பண்ண
பின் சீட்டிலிருந்து ஒருவன்  விசில் அடிக்க "ஹேய்  அஸ்வின் என்ன வேளை இது"என்று பெண்குரல்  கேட்டது.

"சும்மா தான்."என்றான்அவன்.
"சும்மாவா,ஓஓஓஓஓ."என்றாள்.அந்த விசில் அவளுக்கு
என்று புரிந்தது.கொஞ்சம்  கூச்சமாக இருந்தது.பின்பு நல்ல காட்சி வந்தபோதும் அவள் வாய் திறக்கவேல்லை.இடைவேளை  வந்தது தோழிகள் வெளியே  செல்ல ருபா கேட்டாள் "பூஜா உனக்கு என்ன வேண்டும்"."எனக்கு ஒரு கோன் ஐஸ்."என்றாள்."ஒகே "-ருபா.
அவள் சென்ற பின், மெல்ல திரும்பி பார்த்தாள். சீட் காலியாக இருந்தது.
அதற்குள்  படம் ஆரம்பமாக விளக்குகள் அணைக்கபட்டது .திரையில் விளம்பரம்  போட தோழிகள் இன்னும்  உள்ளே  வரவில்லை. திடீரென்று அருகே  நிழலட பூஜா நிமிர்ந்தாள்.கையில் ஐஸ்கீரிமோடு நின்றான் ஒரு இளைர்ன் நின்றான். நல்ல உயரமாக இருந்தான்.அவன் தன் முதுகு திரை
பக்கமாக இருந்ததால் அவன் முகத்தில் மெல்லிய வெளிச்சமே அடிக்க அவளால்
அவன் முகத்தை கவனிக்கவில்லை.அவளிடம் ஐஸ்ஸை நீட்டினான்.அவள் முறைக்க "உன் தோழி கொடுத்தாள் ".என்றான்.அவன்  குரலை கேட்டவுடன் தன் பின்சீட் இளைஞன் இவன்தான் என்று நினைத்தாள்.ஏனோ அவளுக்கு வெட்கம் வர அமைதியாக ஐஸ்ஸை வாங்கி கொண்டு "தாங்ஸ் "என்றாள்.அவன்  ஒரு புன்னகை யோடு தன் இருக்கையில் அமர்ந்தான். மனதுக்குள் தோழிகளை திட்டினாள்.இவர்கள்  கொண்டுவர வேண்டிதுதானே என்று.
பூஜா ஐஸ்ஸை சாப்பிட்டு முடிக்கவும் படம் போடவும் அவர்கள் வரவும் சரியாகஇருந்தது .
படம் முடிந்தது எழுந்து திரும்பி பார்த்தாள் அப்பவும் அவஏனோ ன் இருக்கை  காலியாக கோபமாக வந்தது ஏன் என்று தெரியவில்லை.பேசி கொண்டே வந்த தோழிகளிடம்  தன் கவனத்தை  திருப்பினாள்.அவரகளோ நாளை எந்த படம் என்று பேசினார்க்ள்.
"ஹேய்,முதல்ல ஹாஸ்டலுக்கு போகாலாம் அப்புறம்  முடிவு  பண்ணு "-பூஜா
"இரு, நீ காலைலே சினிமாவுக்கு வரயா முதல்ல. அத சொல்லு ". மீனா.
"இல்ல ".-பூஜா. அதற்குள் அனைவரும்  வெளியே வந்து விட, "சரி  நீங்க இங்கேயே நில்லுங்க. நாங்க போய்  வண்டி எடுத்துட்டு  வர்றோம் "-ப்ரியா.
'சரி ''அஞ்சு.
 ஸ்கூட்டர் வரும்வரை அவள்  கண்கள்  எதையோ தேடியது.மனம்  ஒரு நிலையில் இல்லை.ஏன் என்று அவளுக்கே புரியவில்லை.ருபா ஸ்கூட்டரில்  வந்து விட இரண்டு பக்கம்  கால் போட்டு வண்டியில்பூஜா உட்கார வண்டி  திரை அரங்க வாசலை தாண்டி போது ஒரு காரின் முன்னால்  லேசாக்இடிக.க பூஜா திரும்பி "சாரி "என்றாள்.
காரின் கண்ணாடி  ஏற்றி இருந்தது.முகத்தை கவனியாது அவன்  கண்ணில் ஒரு மின்னல் கீற்று  போல. தெரிந்தது மற்றும் அவன் சிரிப்பு  அவளை ஈர்த்தது.அது அவன் தான். அவள் திரும்பிகொண்டாள்.மழை லேசாக. துரால்
போட்டது.ஹாஸ்டலை நெருங்கிய போது மற்றவர்களை பார்க்க. திரும்பிய பூஜாவுக்கு    அதிர்ச்சி.காரணம் அவன்  கார் அவர்ளை தொடர்ந்தது.கொஞ்சம்  பதட்டமாகி ருபாவிடம் சொல்ல வாயேடுத்தாள்.அதற்குள் கார் இவர்களை கடந்து  அடுத்த.தெரு
வல் சென்றது.அவள் நிம்மதி பெருமுச்சு விட்டாள்.ஹாஸ்டலுக்கு உள்ளே இரவு உணவு நேரம் என்றாலும்  ஐம்பது பேர் மட்டுமே இருந்தனர்.பூஜாதனது தட்டை எடுத்து
வேண்டியதை  எடுத்து கொண்டு  மேஜையில் அமர்தாள்.ஏனோ சாப்பிட பிடிக்க வில்ல.அந்த. கண்கள் அவளை என்னமோ செய் தது.
கை கழுவி விட்டு அறைக்கு செல்ல நினைத்தாள் அதற்குள்    
."பூஜா..கீழ் ரூமுல மீட்டிங் வா."என்றாள் மஞ்சு  .
"வரேன்."..என்றாள் பூஜா.இன்னிக்கு  தூங்குன மாதிரி தான் என்று நின்னைத்தவ "மஞ்சு  நான் போய் டிரஸ் மாத்திட்டு வர்ரேன் பா
."ஒகே.சீக்கரம் வா டா."என்றாள்.
அனைவரது  அறையும் 3வது மாடியில்  உள்ளது.ஆனால் இப்பொழுது விடுமுறை என்பதால் சீதா அனைவரையும் கீழே உள்ள அறையிலேயே தங்க சொல்லிவிட்டார்.ஆனால் பூஜா மட்டும்  தன் அறையில் தங்கிகொண்டாள்.




          தொடரும்.,, ..