......."அஞ்சலி என் அத்தை மகள். அவளுக்கு என்னை திருமணம் செய்து கொள்ள ஆசை.எனக்கும் தான்.சரி சாராவிடம் கேட்டேன். அவளுக்கு அஞ்சலியை தெரியும் என்பதால் ஓகே சொல்லிவிட்டாள்.இப்போ நீயும் என் முக்கியமான தோழி ஆகையால் அஞ்சலியை பார்த்து எனக்கு சரியான ஜோடியா என்று சொல்லவேண்டும்.உன் சம்மதமும் எனக்கு முக்கியம்."என்றான் வருண்.
இதை படிக்கும் போதே வியர்வையில் குளித்தாள்.அவள் இருந்த அறை இடிந்து அவள் தலையில் விழுந்தது போல உணர்ந்தாள்."சே.அவனுக்கு திருமணம் என்றால் எனக்கு என்ன .நான் ஏன் இப்படி நொருங்க வேண்டும் என்று நினைத்தாலும் அவளுக்கு ஏனோ அழுகையாக வந்தது.ஜன்னலை விட்டு விலகி வந்தாள்.கண்ணீர் வழிய "பார்த்து சொல்கிறேன். எனக்கு கொஞ்சம் களைப்பாக உள்ளது நாம் அப்புறமேல் பேசலாம் "என்றவள் அவன் பதிலுக்கு காத்திருக்காமல் கட்டிலில் படுத்தாள்.
ஆனால் அவனோ "ஏய் என்ன நீ, அஞ்சலியை பற்றி நிறைய பேசவேண்டும். ம் சரிம்மா, நீ தூங்கு அப்புறம் பேசலாம் "என்றான் வருண்.
பூஜாவுக்கு நெஞ்சை அடைத்தது. என்ன இது ,எதற்காக நான் இப்படி வருத்தப்படவேண்டும் .என்ன முட்டாள்தனம். வெறும் இரண்டு முன்று நாள் மட்டுமே தெரிந்த ஒருவன் மேல் எதற்காக உரிமை கொண்டாடுகிறது என் மனம். நான் யாரோ அவன் யாரோ என்று நினைக்கையிலேயே கண்ணீர் அருவியானது.எத்தனை நேரமாக இப்படி கட்டில் மேல் கிடந்தாளோ அறை கதவு தட்டும் ஒசை கேட்டு நிழல் காலத்திற்கு வந்தாள்.
"வரேன் "என்று கதவை திறக்க சென்றாள்.
தோழி சுவாதி தான் "ஏய் கும்பகார்னி ,சீக்கிரம் கீழே வா, சினிமாவுக்கு நேரமாச்சு. "என்று சொல்லிவிட்டு போனாள்.
பாத்ருமிற்குள் போய் முகத்தை கழுவி தலையை சீவி ,போனை எடுத்து கொண்டு கீழே வந்தாள்.4ஸ்கூட்டரில் கிளம்பினார்கள்.தியேட்டரில் நல்ல கூட்டம் டிக்கட்டை காலையிலேயே எடுத்ததால்
நேராக. உள்ளே சென்று சீட்டில் அமர்ந்தனர்.
7பேர் முன் வரிசையும் ஒரு சீட் பின் வரிசையில் இருந்தது.பூஜா "நான் பின் வரிசையில் உட்கார்ந்து கொள்கிறேன் " ™என்று தனியாக போய் அம்ர்ந்தாள்.பூஜாவின் பக்கத்து சீட் காலியாக இருந்தது .படம் ஆரம்பித்தவுடன் தோழிகள் கைத்தட்டல். விசில் என்று ஒரே ரகளை தான்.முன்பெல்லாம் அவர்கள் ரகளை செய்யும் போது கலந்து கொள்ளவில்லை என்றாலும் ரசிப்பாள். ஆனால் இன்று எதையும் ரசிக்கும் மனநிலை இல்லை என்பதே உண்மை. அவள் மனம் இன்னும் வலித்து.அதன் எதிரோலியாக கண்ணீர் வழிந்தோடியது.
"ஏன் பாப்பா , படம் ஒண்ணும் அப்படி சோகமா இல்லையே. "-என்றார் அருகில் அமர்ந்திருந்த முதியவர். அப்பொழுது தான் அவள் அவரை கவனித்தாள்.எதுவும் பேசாமல்
கண்களை துடைத்து கொண்டாள்.திரை பார்த்தாள் .நகைச்சுவை படம் என்பதால் நொடிக்கு ஒரு தடவை சிரிப்பு சத்தம் கேட்டது.அவளுக்கு கவனம் எங்கோ இருந்தது. ஒருவழியாக இடைவேளை வந்தது.
தோழிகள் எழுந்து வெளியே வர ஸ்வேதா "பூஜா உனக்கு சாப்பிட ஏதாவது வேண்டுமா "என்றாள்.
"இல்ல எதுவும் வேண்டாம் "என்றாள்.
"ஓகே "என்று அவளும் வெளியே செல்ல பூஜா கையை தலையில் வைத்து கீழே குனிந்து உட்கார்ந்தாள்.பக்கத்தில் யாரோ நிற்பது போல. உணர கண்களை துடைத்து கொண்டு நிமிர்ந்தாள்.
அங்கு ஒரு சிறுமி 12அல்லது 13 வயது இருக்கும் வசதியான வீட்டுபெண் என்பது உடையில் இருந்து தெரிந்தது. பூஜாவிடம் ஒரு ஐஸ்கீரீமை நீட்டி அழகாக தலை சாய்த்து சிரித்தாள் .ஏதும் புரியாமல் பூஜா விழிக்க "பூஜா ஆன்ட்டி, என்ன இப்படி பார்க்கறீங்க, நான் தான் அஞ்சலி. வருண் மாமாவோட அத்தை பொண்ணு.என்னை பார்க்கனும் என்று மாமாகிட்ட நீங்க சொன்னாத சொன்னார் ."என்றாள் சிறுமி.
பூஜாவுக்கு அஞ்சலி சொன்னதில் பின்பாதி ஏதுவும் காதில் விழவில்லை. பூஜாவுக்கு தலைகால் புரியவில்லை. சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனாள்.
அப்படியானால் அவன் தன்னிடம் சும்மா குறும்பு செய்திருக்கிறான்.'வரூண் உன்னை 'என்று நினைக்கையில் "ஹாய் ஆன்ட்டி "என்றாள் இன்னொரு சிறுமி 4 அல்லது5
வயது இருக்கும்.
"இவ தீப்தி ."என்றாள் பெரியவள்.
அதற்குள் படம் ஆரம்பிக்க
"இந்தாங்க ஆன்ட்டி ,மாமா கொடுத்தார் "என்று சொல்லிவிட்டு அவர்கள் சீட்டுக்கு ஓடினார்கள் .அவர்களையே பார்த்தவள் அங்கு
வருணை தேடினாள்.ஆனான் அந்த வரிசை முழுவதுமே பெண் கள் தலைகளாக இருக்க. அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்."வருண் நீ மட்டும் இப்போ என் ஏதிரில் இருந்தாய் என்றால் உன்னை என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது.மதியத்தில் இருந்து என்னை எப்படி வேதனைபட வைத்தாய். "என்று நினைத்தவள் போனை எடுத்து அதற்கு முத்தம் கொடுத்தாள். அப்போது ஒரு தகவல் வர போனிலிருந்து வந்த வெளிச்சம் அவள் முகத்தில் பரவியது.
போனை கீழே இறக்கினாள்.
"என்ன பூஜா குட்டி, அஞ்சலி எனக்கு பொருத்தமான ஜோடி தானே.அதனால் தானே சந்தோஷத்தில் போனுக்கு முத்தம் கொடுக்கிறாய் "என்றான் வருண்.
'ஆமாம் இவருக்கு பெண் பார்க்கதான் நான் இருக்கேனா "என்று சொன்னாள் ஆனால்
போனில் "பொண்ணு சிறுமியா இருக்காளே. அவள் படித்து முடிக்க இன்னும் கண்டிப்பாக 10வருடமாகும்.அப்படி கல்லூரியில் படிக்கையில் அவளுக்கு வேறு யாரையாவது பிடித்துவிட்டாள் நீங்கள் என்ன செய்வீர்கள் வருண்.10 வருட காத்திருப்பு வீண்.அதுவுமில்லாமல் உங்களுக்கு 36 வயதாகிவிடும்.ஒருவேளை
அஞ்சலியே மறுக்கலாம். "என்று அனுப்பினாள்.
"அட, நீ சொல்வதைப்பற்றி நான் யோசிக்கவேயில்லை.36 வயதில் யார் என்னை கல்யாணம் பண்ணிக்குவாங்க "என்றான் வருண்.
"ஏன் நானில்லை "என்று அவள் வாய்விட்டு சொன்னாலும் போனில் "ம் நன்றாக யோசித்து முடிவெடுங்கள் "என்று அனுப்பினாள். திடீரென்று இருமல் சத்தம் கேட்டபோது தான் பக்கத்து சீட் தாதா ஞாபகம் வர 'அடடா, இத்தனை நேரம் நான் பேசியதைல்லாம் இவர் கேடட்டிருப்பாரோ. 'என்று நினைக்கையில் அவளுக்கு வெட்கமாக இருந்தது. போனை உள்ளே வைத்துவிட்டு படத்தை பார்த்தாள். ஆனால் இப்பொழுதும் படத்தில் கவனமில்லை. முதல்பாதி வருத்ததால் ரசிக்கவில்லை என்றால் பின் பாதியை சந்தோஷத்தால் ரசிக்கவில்லை.
இந்த வருண் சரியான. குறும்புக்காரன்.'
'மதியத்திருந்து என்னை ஒருவழி செய்துவிட்டான் இப்பொழுது மட்டும் அவன் என் கையில் கிடைத்தான் அவ்வளவு தான்.ஆனால் அதற்கு அவனை முதல் கண்டுபிடிக்க வேண்டுமே.அதற்கு என்ன வழி 'என்று மனதில் யோசித்தாள்.
படம் முடிந்தது. தோழிகளோடு வெளியே வந்தாள்.
"ஏய் நீங்க இங்க நில்லுங்க. நாங்க போய் வண்டியை எடுத்துட்டு வர்றோம் "என்றாள் சுவாதி. அதுவும் சரிதான். வண்டிகள் நிற்கும் இடத்தில் நல்ல கூட்டம் ஒருவரை ஒருவர் இடித்துகொண்டும் முறைத்துகொண்டும் இருக்கையில் நான்கு வண்டியை எடுக்க எட்டு பேர் போனால்?.அவ்வளவு தான்.
"ஓகே, நாங்க கேட் கிட்ட நிற்கறோம் "என்று சொல்லிகொண்டே கேட்டை நோக்கி நடந்தார்கள்.
"பூஜா ஆன்ட்டி "என்று சத்தம் கேட்க. பூஜா திரும்பி பார்த்தாள். அது வேறு யாருமில்லை தீப்தி தான்.
பூஜா அவளை பார்த்து கையசைக்க திப்தீயும் கையசைத்து விட்டு நின்று கொண்டிருந்த காரில் ஏறினாள். சரியென்று கேட்டை நோக்கி நடந்தாள்.'வருணை எப்படி கண்டுபிடிப்பது என்று நினைத்தவளின் மூளை சட்டென்று வேளை செய்ய தீப்தி ஏறிய காரை பார்த்தாள். அப்பொழுது கார் அவள் அருகில் வர அந்த காரின் உள்ளே தெரிந்த ஒரு பொம்மை அவளை ஈர்த்தது. கார் நம்பரை பார்த்தவள் அதிர்ச்சியடைந்தாள்.

அதே பொம்மை, அதே நம்பர்
அதே வண்டி தான்
அப்போ வருண்?
தொடரும்,.....,.,,,.,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக