Ads

சனி, 19 ஜூலை, 2014

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (3)


      நூலகத்திற்கு திருப்பி கொடுக்க வேண்டி புத்தகங்ளை எடுத்து தன் கைப்பையில் வைத்தபோது ஏதோ ஒரு பாட்டு சத்தம்  கேட்டது.சத்தம்  எங்கேயிருந்து வருகிறது என்று சுற்றும்  முற்றும்  பார்த்தாள்.கட்டில்  மேலிருந்த பார்சலிருந்து  தான் சத்தம்  வந்தது.அதை பிரித்தாள்.உள்ளே மல்லிகை பூக்களுக்கிடையே ஒரு அழகிய. செல்போன்.
நான்கு நாட்களுக்கு முன்பாக ப்ரியா ஒரு செல்போன் வாங்க பூஜாவையும் அழைத்து சென்றாள்.அங்கு பூஜாவுக்கு ஒரு போன் மிகவும்  பிடித்தது  .ஆனால்  ப்ரியாவுக்கு எதுவும்  பிடிக்கவில்லை ."நீ வேணும்னா வாங்கிக்கோ"என்றாள்.
"ம்ம்ம் எனக்கு வேண்டாம் "என்றவளை பார்த்து "சரி நீ இவ்வளவு தூரம் சொல்லுவதால்இந்த போனை   வாங்கிஉன்கல்யாண பரிசா கொடுக்கிறேன் "என்றா ள் கண்சிமிட்டியபடி."ஏய் "என்று ப்ரியாவை செல்லமா கோபித்து கொண்டாள்.அந்த போன்  தான் இப்பொழுது அவள் கையில் உள்ளது.பார்சலில் எந்த முகவரியும்  இல்லை.யாரு அனுப்பிஇருப்பா? என்று யோசித்தடி சீதா அறைக்கு சென்று கேட்க அவளோ "உன்னோட மாமா பையன்  என்று சொல்லி தான் கொடுத்தான் "என்றாள்.பூஜாவுக்கு தலை வலித்தது.எந்த. மாமா பையன்?யோசித்தபடியே தன் அறைக்குள் நுழையும் போது போன்க்கு ஒரு குறுந்தகவல் வந்தது.
   "ஹாய் என் பெயர் வருண்.நான் மனநல மருத்துவர். போன. வருடம்  என் உறவினர்  வீட்டு  திருமணத்தில்  உன்னை
முதல் முதலாக பார்த்ததேன்.பிறகு பல தருணங்களில் ஏதேச்சையாக உன்னை பார்த்தேன்.நான்கு  நாட்களுக்கு முன்பு கூட அந்த. போன்  கடையில் உன்னை பார்த்தேன். உன்னிடம் பேச நினைத்தேன்.ஒரு சிறு  தயக்கம். நீ தவறாக. எடுத்துகொள்ளதே
.நீ என் தோழியாக இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு தான் இந்த போனை  உனக்கு பரிசாக அனுப்பிவைத்தேன்."என்று எழுதி  இருந்தான்.
"மன்னிக்கவும், முகம் காட்ட தயங்குபவருடன் என்னால் தோழியாக பழகமுடியாது.அதனால்   கீழே வாட்சுமேன் தாதாவிடம் போனை கொடுத்துவிடுகிறேன் பெற்றுகொள்ளுங்கள் "என்றவள் கட்டில் மேலிருந்த பொருட்களை எல்லாம் எடுத்து ஒரு கவரில் போட மீண்டும் பாடல்  கேட்க அது குறுந்தகவல்  தான். எடுத்தாள் "முகம் காட்ட தயங்கவில்லை தோழியே!இன்னும்  ஒரு வாரத்தில் நீ ஊருக்கு கிளமபிவிடுவாய் அதற்குள்  ஏன் முகம் காட்டி தோழமையை வளர்க்க வேண்டும்.எனக்கு உன்னோடு மட்டும்  தான் பழகவேண்டும்  உன் தோழிகளிடம்  அல்ல."என்றான்.
"நீ என்னோடு தோழமையோடு தான் பழகுகிறாய் என்று நான் எப்படி  நம்புவது.முன்பின் அறிமுகம் இல்லாத உன்னிடம் நான் எப்படி ஒரு பொருளை பரிசா வாங்குவது "என்றாள்.2 நிமிடத்தில் பதில் வந்தது."ஏன் நேற்று  மாலை திரையரங்கில் மட்டும்  நான் வாங்கி கொடுத்த ஐஸ்ஸை ரசித்து சாப்பிட்டாயே "என்றான். இதை படித்தவுடன் பூஜாக்கு சட்டென்று அவனது பளிச் கண்கள்  தான் ஞாபகம்  வர அவள் உடல்  சிலிர்ப்பதை உணர்ந்தாள். ச்சே இனி  என்ன எழுதுவது என்று முழிக்க. அவனே தொடர்ந்தான் "நீ என்னை நம்பாலாம் நான் உன்னை ஒன்றும்  செய்யமாட்டேன்.வெறும் ஏழு நாட்கள்  தானே.அப்பா, ஒருவருடன்  நட்பு வைத்துகொள்ள. இவ்வளவு  யோசனையா? .என்றான்.பதிலேதும் எழுதாமல் கட்டிலில் படுத்து யோசித்தாள். உண்மை தான் நேரிலா பேசுகிறோம் போனில் அதுவும் குறுந்தகவல்  தானே என்று நினைத்தவள்  அப்படியே தூங்கிபோனாள்.
       

அவள் வாழ்க்கையில்இந்த 7. நாட்கள்  திசை மாற்ற போவது தெரியாமல் தூங்கிகொண்டிருக்கிறாள்.


தொடரும்.,.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக